அமராவதி:ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சித்தூர் இருந்துவருகிறது. இதனால், திருப்பதி கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் குறையத் தொடங்கியுள்ளது. திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைனில், பதிவுசெய்த பிறமாநிலத்தவர்களில் பலர், தங்களது டிக்கெட்டுகளை ரத்துசெய்துள்ளனர்.
இந்நிலையில், மாநில அரசின் அறிவுரையை ஏற்று திருப்பதி கோயிலில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளது திருப்பதி தேவஸ்தானம். அதன்படி, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் உஷ்ணம் உணர்த்தும் கருவியின் மூலம் சோதிக்கப்பட்டு, அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், கோயில்களுக்கு வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது. இந்தக் கரோனா கட்டுப்பாடு வழிமுறைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.