தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் மசூதி ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை - முதலமைச்சர் பொம்மை விளக்கம்

கர்நாடகாவில் உள்ள மசூதிகளில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கர்நாடகாவின் வலதுசாரி அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கர்நாடகாவில் மசூதி ஒலிப்பெருக்கிகளுக்கு தடை
கர்நாடகாவில் மசூதி ஒலிப்பெகர்நாடகாவில் மசூதி ஒலிப்பெருக்கிகளுக்கு தடைருக்கிகளுக்கு தடை

By

Published : Apr 5, 2022, 10:53 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் தடையால் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன. இதைத் தொடர்ந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் மசூதிகளில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்குத்தடை விதித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது கர்நாடகாவில் மசூதிகளில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என வலதுசாரி அமைப்பினர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, 'அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக செயல்படும். அனைத்து சங்கங்களுடன் பேசி நீதிமன்றத்தின் தீர்ப்பு மீதான தெளிவான முடிவு எடுக்கப்படும்' எனவும் கூறினார்.

மேலும் நேற்று(ஏப்ரல் 4) ஸ்ரீ ராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், 'ஒலிப்பெருக்கிகளால் ஏற்படும் மாசை குறைக்க அதனை அகற்ற வேண்டும்' என மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து பொம்மை கூறுகையில், 'இந்த அனைத்து திட்டங்களும் முன்னதாகவே திட்டமிடப்பட்டவையே. தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.

உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்குப்பதில் அசான் நிறுவனம் நிர்ணயித்த ஒலியின் டெசிபல் அளவுக்குள் ஒலிபெருக்கிகளை ஒலிக்க செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார். இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, 75 ஆண்டுகளாக இருந்தபோது மாசடையாமல் இருந்தது, தற்போது மாசடைந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த அரசு ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்பின் ஆதரவாளராகவே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இது குறித்து பொம்மை கூறுகையில், ' தற்போது உள்ள அரசு இதனை ஒரு போதும் ஏற்காது. சங்பரிவாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பொய்யான கருத்து' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மே.வங்க ஆளுநர் முக்கிய கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார்- மம்தா பானர்ஜி

ABOUT THE AUTHOR

...view details