நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது. இதனிடையே, தடுப்பூசி விநியோகப் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இந்தநிலையில், 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி - அடுத்தகட்ட விநியோகப் பணி தீவிரம்! - தடுப்பூசி விநியோக பணி
டெல்லி: அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி
அதேபோல், 45 வயதுக்கு மேலானவர்கள் மற்ற நோய்களால் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அடுத்தகட்ட தடுப்பூசி விநியோகப் பணி குறித்த முடிவை எடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 24, 2021, 5:31 PM IST