தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"PC" என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது யார்...?

ஊழல் புகாரில் சிக்கிய முக்கிய அரசியல் தலைவர்களான ப.சிதம்பரம், பார்த்தா சட்டர்ஜி இருவரும் பிசி என்றே அறியப்படுகிறார்கள். அதைத் தாண்டி இருவருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.

PeeCee
PeeCee

By

Published : Jul 30, 2022, 2:48 PM IST

கொல்கத்தா: பிசி (PC) என்ற அப்ரீவேஷனுக்கு போலீஸ் கான்ஸ்டபிள், பர்சனல் கம்ப்யூட்டர் என பல பொருள் உண்டு. ஒரு பத்திரிகையாளருக்கு பிசி என்றால் பத்திரிகையாளர் சந்திப்பு (Press conference) நினைவுக்கு வரலாம். அதேபோல், அரசியல் மற்றும் சினிமாவிலும் சில பிரபலமான பிசிக்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் செய்திகளில் பிரபலமான ஒரு பிசி என்றால் அது ப.சிதரம்பரம்தான். இவர் அரசியலில் முக்கியப் புள்ளியாக இருப்பவர்.

இதேபோல், பாலிவுட் சினிமாவில் பிசி என்றால், அனைவருக்கும் நினைவில் வருவது நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்க பாடகரான நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டதையடுத்து, ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் பிசி (PeeCee)என்றே அழைக்கப்பட்டார். பிரியங்கா சோப்ராவுக்கு PeeCee என்ற பெயரில் பல ஃபேன் பேஜ்ளும் உள்ளன.

இந்த வரிசையில் அண்மையில் பிரபலமான மற்றொரு பிசி இருக்கிறார். அவர், ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கிய மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி. இவருக்கும் ப.சிதம்பரத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் பிசி என்று அழைக்கப்படுவதைத் தாண்டி, இருவருமே அரசியல்வாதிகள்.

மிக முக்கியமாக இருவரும் ஊழல் புகார்களில் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால், ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி கைவிடவில்லை, பார்த்தா சாட்டர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் கைவிட்டுவிட்டது. ஊழல் வழக்குகளை எதிர்த்து போராட ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் பக்க பலமாக இருந்தது. மறுபுறம் சாட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ், அவரை தனியாக போராடச் செய்துவிட்டது. இந்த பிசி தண்டனை பெறுவாரா? அல்லது தப்பித்துவிடுவாரா? என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

இதையும் படிங்க:காதலுக்கு கை கொடுத்த ‘கூகுள் டிரான்ஸ்லேடர்’ - நாடுகள் கடந்த டேட்டிங் காதல்!

ABOUT THE AUTHOR

...view details