தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர்: 15 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த ஒய்-ஃபை சேவை!

உலக ஒய்-ஃபை தினமான இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 15 ரயில் நிலையங்களில் ஒய்-ஃபை வழங்கப்பட்டதை அறிவித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Kashmir Valley railway stations
Kashmir Valley railway stations

By

Published : Jun 20, 2021, 6:46 PM IST

டெல்லி: ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 15 ரயில் நிலையங்களுக்கும் இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ஒய்-ஃபை சேவை வழங்கப்பட்டுள்ளது.

பாராமுலா, ஹம்ரே, பட்டான், மஸ்சோம், புட்கம், ஸ்ரீநகர், பம்போர், காகபோரா, அவந்திபுரா, பன்ஸ்கம், பிஜ்பெஹரா, அனந்த்நாக், சதுரா, காசிகுண்ட், பனிஹாலில் உள்ள ரயில் நிலையங்களுக்கு ரயில்வயர் என்ற பெயரில் ஒய்-ஃபை சேவை வழங்கப்படுகிறது. ரயில்டெல் நிறுவனத்திடம் இந்த பொறுப்பை ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் 6000-க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் ஒய்-ஃபை சேவை வழங்கப்படுகிறது. அதில் இது உலகிலேயே பெரிய ஒருங்கிணைந்த ஒய்-ஃபை சேவையில் ஒன்று ஆகும்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஒய்-ஃபை சேவை மக்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற இணைப்பில் இது பாலமாக இருக்கிறது. இந்திய ரயில்வேயும், ரயில்டெல் கார்ப்பரேசனும் இணைந்து நாடு முழுவதும் அதிவேக ஒய்-ஃபை சேவையை வழங்க திட்டமிட்டுள்ளோம். உலக ஒய்-ஃபை தினமான இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 15 ரயில் நிலையங்களில் ஒய்-ஃபை வழங்கப்பட்டதை அறிவித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details