தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்லூரியில் அதிகரித்த குரங்குகள் தொல்லையால் லங்கூர் குரங்குகள் வரவழைப்பு - बंदरों ने किया छात्रों पर हमला

உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் குரங்குகளின் தொல்லை அதிகரித்ததால் அதை சமாளிக்க ’லங்கூர்’ இனக் குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கல்லூரியில் அதிகரித்த குரங்குகள் தொல்லை : குரங்குகளை சமாளிக்க லங்கூர் குரங்குகள் பணியமர்த்தம்
கல்லூரியில் அதிகரித்த குரங்குகள் தொல்லை : குரங்குகளை சமாளிக்க லங்கூர் குரங்குகள் பணியமர்த்தம்

By

Published : Jul 28, 2022, 11:00 PM IST

உத்தரப் பிரதேசம் (அலிகர்) :காந்திப் பூங்கா பகுதியிலுள்ள தர்ம சமாஜ் மஹாவித்யாலயா கல்லூரியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் லங்கூர் இனத்தைச் சேர்ந்த குரங்குகளை கல்லூரியில் வைத்து மற்ற குரங்குகளை பயமுறுத்த திட்டமிட்டனர்.

அவைகளின் உரிமையாளருக்கு 9,000 ரூபாய் சம்பளம் தரப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் வெர்மா கூறுகையில், “ மாநகராட்சியின் அலட்சியத்தால் கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகமாகியுள்ளது.

அவைகள் சகட்டுமேனியாக பல மாணவர்களைத் தாக்கியுள்ளன. அதனால் தான் தற்போது கல்லூரியின் 10 இடங்களில் லங்கூர் இனக் குரங்குகளை பணியமர்த்தியுள்ளோம். மேலும், மாணவர்களின் உணவை குரங்குகள் பறித்துச் செல்லாமல் பாதுகாக்க கேண்டீனிலும் லங்கூர் குரங்கை அமர்த்தியுள்ளோம்” எனக் கூறினார். மேலும், அவர் இதுகுறித்து மாநகராட்சிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: குஜராத் போலி மதுபானம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு... 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்...

ABOUT THE AUTHOR

...view details