இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் ஜோடி ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இவர்கள் கடந்த ஏப்ரலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ஆலியா பட் அவரது படப்பிடிப்பிற்காக லண்டனில் உள்ளார்.
இந்நிலையில் ரன்பீரும், ஆலியாவும் நேற்று(ஜூன்27) அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியான பதிவு ஒன்றைப்பதிவிட்டனர். இப்பதிவையடுத்து அம்மாவாக போகும் ஆலியாவிற்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பாலிவுட்டில் க்யூட் ஜோடியான ஆலியா-ரன்பீரின் இந்த நற்செய்தியால் ஆலியாவின் ரசிகர்கள் குதூகலத்துடன் பதிவுகளையும், மீம்ஸ்களையும் போட்டு வந்தனர்.
ஆலியாவிற்கு ஒரு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த வேளையில் பலர், இந்த ஜோடியின் திருமண தேதியை அதிகமாக தேடிய செய்தி வெளியாகியுள்ளது. சினிமாவில் டாப் கதாநாயகிகளை பொறுத்தவரை திருமணமாகி குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே குழந்தைப் பெற்றுள்ளனர். இதற்கு மத்தியில் ஆலியா திருமணமாகி இரண்டே மாதங்களில் கருவுற்று இருப்பது அவரது தீவிர ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.