தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீயாய் பரவும் லம்பி வைரஸால் 15 மான்கள் உயிரிழப்பு!

ஜார்கண்டிலுள்ள பலமு புலிகள் காப்பகத்திலுள்ள மான்கள் லம்பி வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்துள்ளன.

பலமு புலிகள் காப்பகத்தின் மான்களுக்கு லம்பி வைரஸ் தொற்று நோய் ..!
பலமு புலிகள் காப்பகத்தின் மான்களுக்கு லம்பி வைரஸ் தொற்று நோய் ..!

By

Published : Sep 28, 2022, 10:44 PM IST

ஜார்கண்ட்(பலமு):கால்நடைகளுக்கு பரவும் கொடிய லம்பி வைரஸ் தற்போது மான்களுக்கும் பரவி வருகிறது. பலமு புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மான்கள் பாதிக்கப்பட்டு , அவற்றில் 15 உயிரிழந்துள்ளன.

பலமு புலிகள் காப்பகத்தின் இயக்குனர் குமார் அசுதோஷ் கூறுகையில், ”புலிகள் காப்பகம் பகுதி முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மான்களிடையே லம்பி வைரஸ் பரவியதை அடுத்து, பலமு புலிகள் காப்பகம் உஷார் நிலையில் உள்ளது.

நிர்வாகம் கிராம மக்களிடம் கூட்டம் நடத்தி கால்நடைகளை காட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. பல்வேறு பகுதிகளில் கிராம மக்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மான்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் உள்ள துறை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல மது தொழிலதிபரான சமீர் மகேந்திரு கைது

ABOUT THE AUTHOR

...view details