வாஷிங்டன்: ஆண்களால், பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் முதல் இடத்தில் இருக்கிறது என்றும் அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறை
உலகில் எத்தனை பிரச்சினை ஓய்ந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மட்டும் ஒருபோதும் ஓயாதுபோல. எந்த இடத்திலும் ஆணாதிக்கம் அதிகரித்துக் கொண்டேவருகிறது. வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி ஆண் வன்கொடுமையால் இன்றுவரை பாதிக்கப்பட்டேவருகின்றனர். இந்த ஆணாதிக்க சமூகம் பெண்களை வளரவிடுவதும் இல்லை.
குடிப்பழக்கம் உள்ளவர்கள்
குறிப்பாக, குடிப்பழக்கம் உள்ளோர் மூலம் பெண்களுக்குப் பலவிதமான தடங்கல், தகராறுகள் வருகின்றன. குடித்துவிட்டு தான்செய்வது என்ன என்றுகூட தெரியாமல் மனைவியை அடிப்பதும், கொலைசெய்வதும் என வன்முறைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. இது தொடர்பான சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.
புதிய ஆய்வறிக்கை
ஒரு அறிவியல் இதழ் இன்று வெளியிட்ட ஒரு புதிய ஆய்வில், குடிப்பழக்கத்திற்கும் வன்முறைக்கும் இடையிலான உறவால் பெண்களுக்கான சமத்துவம் பாதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஆண்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் பெண்களைப் பற்றிய சமத்துவ மனப்பான்மையுடன் இருப்பதில்லை.
மாறாக, பாலியல் ரீதியாகவே அவர்களைப் பார்க்கிறார்கள். தங்கள் மனைவி, காதலிக்கு எதிராக வன்முறையில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். குடிப்பழக்கத்தினால் பெரும்பாலான இடங்களில் மனைவி, காதலியை இன்றுவரை ஆண்கள் அடிமையாகவே வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆண்களிடம் சில நேர்காணல் செய்யப்பட்டது. அதில், 13 விழுக்காடு ஆண்கள் குடித்துவிட்டு அடிப்பதும், பாலியல் ரீதியாகவும் பெண்கள் வன்முறை செய்யப்படுவதும் என்று தெரிவிக்கப்படுகின்றன. ஆண்களின் முரண்பாடுகள் குணம் குடிப்பவர்களை காட்டிலும் 3.42 மடங்கு அதிகமாக உள்ளனர்.
ஆசிரியர் டாக்டர் ஆன்னி மேரி லாஸ்லெட்
ஆய்வறிக்கையின் ஆசிரியர் டாக்டர் ஆன்னி மேரி லாஸ்லெட் கூறுகையில், "ஏற்கனவே பெண்களை தங்களது போகப்பொருளாகவும், கீழானவர்கள் என்றும் ஆண்கள் கருதுகிறார்கள். அப்போது குடியும் இணைந்துவிட்டால் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது.
இதைச் சரிசெய்ய பெண்களுக்கு எதிரான ஆண்களின் மனநிலை மாறுவதோடு, குடிப்பழக்கத்தையும் அவர்கள் கைவிட வேண்டியது அவசியமாகும்" என்றார்.
என்ன செய்வது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அப்படி ஒரு சூழல் சாத்தியமா என்று தெரியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்றுவரை மனைவியரின் கண்ணீரில் குளிர்காயும் ஆண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க : கரோனா தடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் உத்தரவு