ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) விஜய் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுன்டர் குறித்து பேசினார். அப்போது, "காஷ்மீரின் துஜ்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த துப்பின் அடிப்படையில், காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், பயங்கரவாதிகளுக்கும் காவல் துறைக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர், காவல் துறையுடன் ராணுவம் இணைந்து நடத்திய என்கவுன்டரில் அல் பாதர் அமைப்பின் தலைவர் கானி காஜ்வா சுட்டு வீழ்த்தப்பட்டார். மேலும், அமைப்பில் சேரவிருந்த இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.