தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! - ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்: பொக்ரானின் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

ஏவுகணை
ஏவுகணை

By

Published : Mar 26, 2021, 3:34 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரானில் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்டது.

வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, "கடந்த மார்ச் 23ஆம் தேதி, சோதனை நடைபெற்றது.

குறுகிய தூரத்தில் இருக்கும் திறன்வாய்ந்த எதிரி நாடுகளின் ஆயுதங்களை மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தாக்கி அழிக்கும். இந்திய ராணுவமும், இந்திய வான் படையும் இந்த ஏவுகணையைப் பயன்படுத்தவுள்ளது.

ட்வீட்

சோதனையின்போது சிறப்பாகச் செயல்பட்ட ஏவுகணை அனைத்து நோக்கங்களையும் பூர்த்திசெய்துள்ளது. 40 கிமீ தொலைவு வரை தாக்கி அழிக்கும் கட்டுப்பாட்டு அமைப்பை இந்த ஏவுகணை கொண்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details