புதுச்சேரி:மத்திய பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) தாக்கல்செய்தார். இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் புதுச்சேரிக்கு என்று தனி நிதி ஒதுக்கப்படவில்லை, வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனைக் கண்டித்து புதுச்சேரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நேற்று (பிப்ரவரி 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சிக்னலில் இருந்த பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அல்வா கொடுக்கும் போராட்டம்