டெல்லி:இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜூலை 5ஆம் தேதிமுதல் உள்நாட்டு விமானங்களில் 65 விழுக்காடு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 72.5 விழுக்காடு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறையில் இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்துவந்தது. அதன் காரணமாக உள்நாட்டு விமான சேவைகள் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக, விமானங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துவந்தன.