புனே:மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கோஜுபாவி கிராமத்திற்கு அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. பாராமதி விமான நிலையத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
நல்ல வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதமின்றி பயிற்சி அளித்த விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட போது இந்த விமானம் விபத்துக்குள்ளானது அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.
4 நாட்களில் 2வது முறை:கடந்த நான்கு நாட்களில் மட்டும் இது போன்று நடப்பது 2வது முறையாகும். இதே போல் கடந்த அக்19 ஆம் தேதி கப்டல் கிராமம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை இல்லை” - மன்சூர் அலிகான்