டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபிக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐ, அமலாக்கத்துறைக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறைக்கு ஒரு மாத கால அவகாசம் - அமலாக்கத்துறை
சிபிஐ, அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் கேட்டுக்கொண்டதன் பேரில் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் அனுமதி அளித்துள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து உரிய ஆவணங்களை பெற்றுத்தர இந்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் கேட்டுக்கொண்டதன் பேரில் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் அனுமதி அளித்துள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டன், சிங்கப்பூருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை என சஞ்சய் ஜெயின் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ, அமலாக்கத்துறைக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.