தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தரையிறங்கும் போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்திய விமானம்; பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு!

கத்தார் நாட்டிலிருந்து ஆந்திரா வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது மின்கம்பத்தில் மோதியது. இதில், விமானத்தின் இறக்கை பழுதாகியுள்ளதாகவும், பயணிகள் யாரும் காயமடைவில்லை எனவும் விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

air India plane missed an accident at gannavaram airport
தரையிறங்கும் போது மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்திய விமானம்; பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு!

By

Published : Feb 20, 2021, 7:34 PM IST

அமராவதி: கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து 64 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகேயுள்ள கன்னாவரம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் இன்று (பிப்.20) வந்துள்ளது.

தரையிறங்கும் நேரத்தில், விமானம் மின்கம்பத்தில் மோதியதால், விமானத்தின் இறக்கையில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என விஜயவாடா விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:திஷா ரவிக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details