திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கடிற்கு விமானம் புறப்பட்டது.
கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் 105 பயணிகளுடன் மஸ்கடிற்கு காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் தீடிரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.