இன்று (ஏப்.09) காலை கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 17 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன்குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 30 நிமிடங்கள் வானத்தில் பறந்த பின்னர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலைய அறிவிப்புகளின்படி விமானம் காலை 8.35 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்குத் திரும்பியது.
அவசர அவசரமாகத் தரையிரங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! - அவசர அவசரமாக தரையிரங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!
கோழிக்கோடு: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.
அவசர அவசரமாக தரையிரங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!
விமானத்தின் சரக்கு தளத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததைத் தொடர்ந்து விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பொதுமுடக்க அச்சம்: மும்பையிலிருந்து சொந்த ஊர் கிளம்பும் குடிபெயர்ந்தோர்!