அமராவதி: ஆந்திராவில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. திருப்பதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சித்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, காரில் சென்று இருவர் அந்த வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு பொக்லைன் ஒன்று கொண்டுவரப்பட்டு, காரில் இருந்த இருவரை மீட்டனர். அப்போது வெள்ளத்தின் வேகம் அதிகமான நிலையில், பொக்லைன் இயந்திரமும் வெள்ளத்தில் சிக்கியது.
பத்திரமாக மீட்பு