தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீனவர் வலையில் சிக்கிய ராணுவ விமானம்! - ராக்கெட்

புதுச்சேரி: மீனவர் வலையில் சிக்கிய இந்திய வான்படையின் குட்டி விமானம் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

force
force

By

Published : Dec 17, 2020, 4:09 PM IST

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த மீனவர் சுதாகர். இவர் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அவர் வீசிய வலையில் கனமான பொருள் ஒன்று சிக்கியது. அதனை மெதுவாக இழுத்து பார்த்தபோது, 10 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட சிறிய ராக்கெட் போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது.

அதனை அப்படியே கரைக்கு கொண்டு வந்த சுதாகர், அது குறித்து மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தார். ராக்கெட்டை போல இருந்ததை கண்ட மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

மீனவர் வலையில் சிக்கிய ராணுவ விமானம்!

உடனே அங்கு வந்த கடலோர காவல்படை கண்காணிப்பாளர் பாலசந்தர், என்சிசி அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர், அந்த பொருளை ஆய்வு செய்தனர். அப்போது இந்திய விமானப்படை வானில் ஏவி சுட்டு பயிற்சி எடுக்கும், டம்மி ராக்கெட் அது என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:எல்லை தாண்டிய ரயில் சேவை: இந்தியா, வங்கதேசம் இடையே ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details