தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவை பாதுகாப்புத் துறையில் உலகின் சிறந்த நாடாக்குவதே இலக்கு- ராஜ்நாத் சிங்! - பிரதமர் மோடி

இந்தியாவை பாதுகாப்புத் துறையில் உலகின் சிறந்த நாடாக்குவதே அரசின் இலக்கு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

By

Published : Oct 15, 2021, 8:47 PM IST

டெல்லி: நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்த ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை ஏழு நிறுவனங்களாக மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த ஏழு நிறுவனங்களையும் பிரதமர் மோடி இன்று (அக்.15) காணொலி காட்சி வாயிலாக திறந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "பாதுகாப்புத் துறையின் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக கொண்டு வருவதே அரசின் இலக்கு. 35 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி உள்பட விண்வெளி, பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளில் 2024 ஆம் ஆண்டிற்குள் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை தற்சார்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது" என்றார்.

முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், அவனி ஆர்மர்ட் வெஹிகல்ஸ் லிமிடெட், அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் மற்றும் எகியூப்மென்ட் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், யந்த்ரா இந்தியா லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட் மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் அகியவை புதிதாக உருவாக்கப்பட்ட ஏழு நிறுவனங்காளகும்.

இந்த ஏழு நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:100 கோடி டோஸ் தடுப்பூசி - மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேலூர் கோட்டை

ABOUT THE AUTHOR

...view details