கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக, தலைநகர் டெல்லி கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுபாடு நிலவும் நிலையில், இந்த மோசமான நிலை எய்ம்ஸ் மருத்துவமனையையும் விட்டுவைக்கவில்லை.
இன்று(ஏப்.24) மதியம் அங்கு ஏற்பட்ட ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் புதிய நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஏற்கனவே அவசர சிகிச்சைப் பிரிவில் 100 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைப் பெற்ற நிலையில், ஒரு மணி நேரம் புதிய நபர்களுக்கான சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆக்ஸிஜன் சிக்கல் தீர்த்து வைக்கப்பட்டு மீண்டும் சிகிச்சைப் பிரிவு செயல்படத் தொடங்கியது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,331 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 348 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க:1 ரூபாய்க்கு உயிர்காற்று: உ.பி. தொழிலதிபரின் தயாள குணம்