புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்த 2 வயது குழந்தைக்கு திடீரென மூச்சு நின்ற நிலையில் விமானத்தில் இருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் 5 பேர் குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தனது ட்விட்டர் பதிவில் இன்று (28.08.2023) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன் விமானம் UK-814 புறப்பட்டது. இதில் இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையும் பயணித்துள்ளது. இந்நிலையில் பயணத்தின்போது குழந்தை சுயநினைவை இழந்ததாக எய்ம்ஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானம் நாக்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்நிலையில் விமனத்தில் இருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் 5 பேர் குழந்தைக்கு உதவ முன்வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை பரிசோதித்ததாக முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!
இது குறித்து எய்ம்ஸ் கூறுகையில், “குழந்தையின் நாடித் துடிப்பு இல்லை மேலும் குழந்தை சுவாசிக்கவில்லை. இதனால் விமானத்திலேயே உடனடி CPR தொடங்கப்பட்டது. குறைந்த பொருட்களுடன், குழுவின் திறமையான வேலையாலும், நிர்வாகத்தின் செயலாலும் குழந்தைக்கு நரம்பு மூலம் மருந்து செலுத்தும் ஊசி (IV canulla) வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சுவாசப்பாதையை பராமரிக்க அல்லது திறக்க பயன்படும் ஓரோஃபரிஞ்சீயல் எனும் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த அனைவரது ஒத்துழைப்பால் குழந்தை ROSC க்கு (தன்னிச்சையான இயல்பு நிலை) கொண்டு வரப்பட்டது," எய்ம்ஸ் கூறியது.
இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிலைமையில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், திறமையான மருத்துவர்கள் குழந்தையை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க ஒரு தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டரை (AED) பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. நாக்பூரை அடைந்ததும், ஒரு குழந்தை மருத்துவரிடம் மேல் சிகிச்சைக்காக குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!