நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, அகமகாபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கோவிட்-19 தீவிரத்தன்மை மோசமாகிவருகிறது.
தலைநகர் டெல்லியில் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகிவருகிறது. இதன் காரணமாக படுக்கை, ஆக்ஸிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும், சிகிச்சை தரும் முன்களப் பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவருவது நிலைமையை மேலும் மோசமாக்கிவருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதயை அவசர சூழலை கருத்தில்கொண்டு முன்களப் பணியாளர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தனிமைபடுத்தப்படுவார்கள். அதேவேளை அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை தேடி பரிசோதிக்கும் நடவடிக்கை கைவிடப்படும் எனவும் எய்ம்ஸ் கூறியுள்ளது. பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பத்து நாள்களில் மீண்டும் பணிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 தொடர்பான வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!