தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் அத்துமீறல் - இந்திய மகளிர் கால்பந்து அணி பணியாளர் இடைநீக்கம் - AIFF suspends individual after India

பாலியல் அத்துமீறல் தொடர்பான விவகாரத்தில் இந்திய மகளிர் U-17 கால்பந்து அணி ஊழியர் ஒருவரை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்திய மகளிர் கால்பந்து அணியில் முறைகேடு செய்த பணியாளர்- இடைநீக்கம் செய்த AIFF
இந்திய மகளிர் கால்பந்து அணியில் முறைகேடு செய்த பணியாளர்- இடைநீக்கம் செய்த AIFF

By

Published : Jul 1, 2022, 7:15 AM IST

Updated : Jul 1, 2022, 7:47 AM IST

அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) நேற்று(ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : "இந்திய U-17 பெண்கள் கால்பந்து அணி தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிக்காக சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு அணியுடன் இருக்கும் ஊழியர் பாலியல் சீண்டல் தொடர்பான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் AIFF அந்த ஊழியரின் பெயரை வெளியிடவில்லை. ஆனால் தற்காலிகமாக அந்த நபரை இடைநீக்கம் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

AIFF சம்பந்தப்பட்ட நபரை அணியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பவும், அவர் வந்தவுடன் மேல் விசாரணைகளுக்கு ஆஜராகுமாறும் கூறியுள்ளது. ஜூன் 22 முதல் 26 வரை இத்தாலியில் நடந்த 6வது டோர்னியோ பெண்கள் கால்பந்து போட்டியில் இந்திய இளம் பெண்கள் அணி கலந்து கொண்டது.

அங்கு சிறந்த எதிர் அணிகளான இத்தாலி மற்றும் சிலிக்கு எதிரான போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்து நார்வேவிற்கு செல்கிறது. தொடர்ந்து ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை நார்வேயில் நடைபெறும் ஓபன் நோர்டிக் போட்டி U16 மகளிர் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்திய அணி NORDIC போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:WTA 250 மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் தொடக்கம்!

Last Updated : Jul 1, 2022, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details