தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் - AICC General Secretary Venugopal

Congress Working Committee Meeting at Hyderabad: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஹைதராபாத்தில் செப்.16 மற்றும் 17ல் கூடுகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

aicc-general-secretary-venugopal-say-cwc-meeting-held-on-16-and-17-at-hyderabad
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஹைதராபாத்தில் கூடுகிறது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 4:19 PM IST

டெல்லி:காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி (Congress Working Committee) கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியை (Congress Working Committee) ஹைதராபாத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி கூட்டுகிறார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (செப்.4) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் இடம் பெறும் காங்கிரஸ் கட்சியின் விரிவான செயற்குழு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் மேலும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவிக்கும் நிகழ்வாகச் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கலந்து கொள்ளும் பேரணி ஹைதராபாத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். மேலும் பழைய கமிட்டி உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, இளைஞர்களுக்கு இடம் அளிக்கும் விதமாகவும் மற்றும் G23 (23 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) குழுத் தலைவர்களான சசி தரூர் மற்றும் ஆனந்த் சர்மா உட்பட 84 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் முக்கிய முடிவு எடுக்க கூடிய வகையில் கமிட்டி அமைந்துள்ளது. மேலும் இதில் 15 பெண்கள் மற்றும் சச்சின் பைலட் மற்றும் கவுரவ் கோகோய் போன்ற பல புதிய முகங்களும் உள்ளனர்.

இதையும் படிங்க:கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர முடிவு வேண்டும் - இலங்கை முன்னாள் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details