புதுச்சேரி அதிமுக மாநில செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால் அப்பதவி காலியாக இருந்து வந்தது. இதையடுத்து புதுச்சேரி மாநில செயலாளர் பதவி பெறுவது யார் என்பது தொடர்பான போட்டிகள் அதிமுகவினரிடையை இருந்துவந்தது.
இந்த நிலையில் அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை வாயிலாக புதுச்சேரி மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. மேலும் அதில், கிழக்கு பகுதிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கழக செயலாளராகவும், மேற்கு பகுதிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஓம்சக்தி சேகர் கழக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.