சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 10-ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் புலிகேசி நகர்(159) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் D.அன்பரசன், கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர் போட்டியிடுவார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகேசி நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் பெங்களூருக்கு அருகே இருப்பதோடு அந்த தொகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் வாக்குகள் உள்ளது. குறிப்பாகக் கன்னட மொழியைப் பூர்விகமாகக் கொண்டவர்களைத் தவித்து 68 ஆயிரம் வாக்காளர்கள் மாற்று மொழி பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.