தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 19, 2021, 10:00 AM IST

ETV Bharat / bharat

'டிராக்டர் பேரணி முடிவை விவசாயிகள் கைவிட வேண்டும்' - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

குவாலியர்: குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவாலிய
குவாலிய

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் விவசாய குழு பிரதிநிதிகள் நடத்திய ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், நாளை(ஜன-20) 10ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இது குறித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாய சங்கங்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தவிர வேறு கோரிக்கைகளை முன்வைத்தால் மட்டுமே, எளிதாக தீர்வை எட்ட முடியும். இதுவரை ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். சட்டங்களில் எதேனும் சிக்கல் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் அதனை சுட்டிக்காட்டினால் விவாதிக்க தயாராகவுள்ளோம்.

விவசாயிகளின் நலனை காப்பதாக மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது. மோடி அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் பல விவசாய திட்டங்களை வகுத்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாகும். பல தியாகங்களுக்குப் பிறகு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. குடியரசு தினத்தின் கவுரவம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது விவசாயிகளின் பொறுப்பாகும். அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details