இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்காக ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9ஆவது மற்றும் 10ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவையாகும்.
மேலும் 12 ஆம் நூற்றாண்டு சோழர்களின் வெண்கலங்கள், 11, 12ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெயின் சிற்பங்கள், குஜராத்தில் 12, 13 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மணல் கற்களால் செய்யப்பட்ட மஹிசாசூரமர்த்தினி சாமி சிலைகள், 18, 19 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் ஆகியவையும் அடங்கும்.
இந்த சிலைகளை நேரடியாக பார்வையிட்ட பிரதமர் மோடி அவற்றை உரிய இடங்களுக்கு விரைவில் கொண்டு சேர்க்க ஆவண செய்ய வேண்டும் எனக் அலுவலர்களிடம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றப்பின் இதுவரை பல்வேறு நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 228 தொன்மையான பொருள்கள், சிலைகளை மீட்கப்பட்டுள்ளதாக கலாசாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு