ஹைதராபாத்:2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று நேற்று(செப்.11) அறிவித்தார்.
இந்த நிலையில், தெலங்கானா சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், "மோடி அரசால் நாட்டில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதே, பாஜகவின் பிரதானப் பணியாக மாறிவிட்டது. நாட்டில் இதுவரை 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டு, அங்கு சட்ட விரோதமாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஓராண்டுதான் நிறைவடைந்துள்ளது. அதற்குள் அங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்புள்ளது என்று பேசுகிறார்.