ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க உள்நாடு மற்றும் உலக நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில், முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்திற்காக தாஜ்மஹாலுக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வரியை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.