தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாகர்கோவிலில் ஆக.21 முதல் செப்.1 வரை அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம்! - joinindianarmy

நாகர்கோவிலில் அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

AGNIVEER
AGNIVEER

By

Published : Jul 5, 2022, 9:23 PM IST

அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டுத் திடலில், ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பணி அக்னி வீரர்கள், தொழில்நுட்ப அக்னி வீரர்கள், கிளர்க், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது.

இதில், தமிழ்நாட்டின் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆள்சேர்ப்புக்கான வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். இந்த தளத்தில் வரும் 30ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அனுமதி அட்டைகள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details