டெல்லி:மத்திய அரசின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத்திற்கு பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பிகார் மற்றும் தெலங்கானாவில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம் போன்ற வேறு சில மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பல நடவடிக்கைகளுக்குப் பின்னர் போராட்டக்காரர்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டனர்.
பாட்னாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சில பயிற்சி மையங்கள் இந்தப் போராட்டத்தை தூண்டியதற்கான காரணங்கள் கிடைத்தன. மேலும் கைது செய்தவர்களின் வாட்ஸ்அப் மெசேஜ்களில் வன்முறையைத் தூண்டும் குறுஞ்செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் கூறுகையில், 'சிசிடிவியில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கான தூண்டுதலில் ஈடுபட்ட 7 பயிற்சி மையங்களை கண்டறிந்துள்ளோம்’ என்றார்.