ஹைதராபாத்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், ஜார்க்கண்ட், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பேராட்டம் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 17) போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதல்கட்ட தகவலில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதர் ராகேஷ் (23). இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் குமாரசாமி-பூலாம்மா. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். ஹனுமகொண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எழுத்துத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று(ஜூன் 16) மாலை ஹைதராபாத் வந்தார். இன்று துப்பாக்கிச்சூட்டில் சிக்கினார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:அக்னிபாத் போராட்டம்: தெலங்கானாவில் ஒருவர் உயிரிழப்பு