கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் அதிக சத்தத்துடன் கூடிய நில அதிர்வு இன்று (ஜூலை 9) அதிகாலை உணரப்பட்டது. காலை 6.22 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு மூன்று, நான்கு வினாடிகளுக்கு நீடித்துள்ளது. முன்னதாக, காலை 5.40 மணியளவில் சிறிய நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நேற்றிரவில் (ஜூலை 8) இருந்து அங்கு கனமழை பெய்து வந்த நிலையில், அதிகாலை நேரத்தில் நில அதிர்வும் ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில், இந்த பகுதிகளில் பலமுறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்று நிகழ்ந்தது போன்று பெரும் சத்தத்துடன் இதுவரை நிகழ்ந்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.