தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டம் -அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது! - சுதந்திர தினத்தை சீர்குலைக்க

உத்தரப் பிரதேசத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Al Qaeda terrorists
Al Qaeda terrorists

By

Published : Jul 12, 2021, 9:28 AM IST

பாட்னா : பிகார் காவலர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் துரிதமாக செயல்பட்ட உத்தரப் பிரதேச காவலர்கள் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகளை கைதுசெய்தனர்.

பிகார் சிஐடி காவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மாவட்டத்தின் முக்கிய தலைநகரங்கள் உஷார்படுத்தப்பட்டன.

இந்நிலையில் லக்னோவில் இரண்டு பயங்கரவாதிகளை காவலர்கள் கைதுசெய்தனர். இவர்கள், அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மின்ஹாஸ் அஹமது (30), மாசீரூதீன் (50) என்பது தெரியவந்தது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லக்னோ உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க : ஒரேநாளில் சுட்டு வீழ்த்தப்பட்ட 5 பயங்கரவாதிகள்

ABOUT THE AUTHOR

...view details