தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு பணிக்கு திரும்பிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்.. அவ்வளவு தானா போராட்டம்? - டெல்லி

பாலியல் புகார் விவகாரத்தில் தங்களது போராட்டம் நிறைவு பெறவில்லை என்றும் மத்திய அரசு பணிகளுக்கு திரும்பினாலும் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.

Dry
Dry

By

Published : Jun 5, 2023, 5:15 PM IST

டெல்லி :ரயில்வே பணிகளுக்கு மீண்டும் திரும்பினாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார் போராட்டம் முடிவு பெறவில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் தெரிவித்து உள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பி தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 35 நாட்களுக்கும் மேலாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்த டெல்லி போலீசார், பயிற்சியார்கள், நடுவர்கள் என ஏறத்தாழ 125 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரை மல்யுத்த வீராங்கனை ஒருவர் திரும்பப் பெற்றதாக தகவல் பரவியது. புகார் அளித்த வீராங்கனை மைனர் இல்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படும் நிலையில், நடவடிக்கைக்கு பயந்து அவர் தன் பாலியல் புகார் மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சந்தித்தனர். பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடத்த வேண்டும் என மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது.

அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது மத்திய அரசு பணிகளுக்கு மீண்டும் செல்ல உள்ளதாக கூறப்பட்டது.

சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் தங்களது அரசு பணிகளுக்கு திரும்ப உள்ளனர். வடக்கு ரயில்வே சிறப்பு பணி அதிகாரிகளாக அனைவரும் பணியற்றி வருகின்றனர். மத்திய அரசு பணிகளுக்கு திரும்பியதால் போராட்டத்தை கைவிடவில்லை என்றும் பாலியல் புகார் விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், யாரும் பின்வாங்கவில்லை என்றும் நீதிக்கான போராட்டத்துடன் சேர்த்து ரயில்வேயில் தங்களது பொறுப்பை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறினார். நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க :Opposition parties meet postponed : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details