தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்றாவது காதல் முறிவு குறித்து மனம் திறந்த ப்ரணிதி சோப்ரா - மூன்றாவது காதல் முறிவு

தனது காதல் வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து நடிகை ப்ரணிதி சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

Parineeti
Parineeti

By

Published : Apr 4, 2021, 5:02 PM IST

மூன்று முறை காதல் முறிவினைச் சந்தித்த ப்ரணிதி சோப்ராவிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், யாரேனும் முக்கியமான நபர் அவரது வாழ்க்கையில் இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,‘தொழிலையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சீராக கையாளும் நிறைய பேர் இருக்கிறார்கள், ஏன் நானும் அதில் ஒருவள்தான். ஆனால், காதல் வாழ்க்கையில் ஈடுபடும்போது, அதற்கு நிறைய நேரம் செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனால் சில நேரங்களில் என்னுடைய தொழில் முறை வாழ்க்கையில் கடின உழைப்பை கொடுக்க முடிவதில்லை’என்றார்.

தொடர்ந்து, சற்று உடைந்த குரலில் பேசத் தொடங்கிய அவர்,’காதலினால் ஏற்படும் இடர்பாடுகளோ, அல்லது வேறு ஏதேனும் இடர்பாடுகளோ இல்லாமல் இருந்தால் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்யமுடியும். இப்போது அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். எனது திரைப்படங்களால் நான் உத்வேகம் அடைந்துள்ளேன். அடுத்த திரைப்படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்’என்றார்.

காதல் மீது தனக்கிருந்த நம்பிக்கையை அவர் இழந்திருந்தாலும், மீண்டும் தனக்கேற்ற நல்ல துணை அமைந்தால் அதற்கான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அந்த உறவை தொடர்வதற்கு தயாராகத்தான் உள்ளார். ”நான் எதற்கும் ‘நோ’ சொல்லவில்லை. ஒருவேளை நல்ல துணையாக ஒருவர் என்னோடு பயணிக்கும்பட்சத்தில், நிச்சயமாக வரவேற்பேன். ஆனால் சமீபகாலமாக நான் யாரையும் கண்டுபிடிக்கவில்லை” என்கிறார் ப்ரணிதி.

இதையும் படிங்க:’ஆயிரத்தில் ஒருவன் 2’ - ரசிகர் உருவாக்கிய ட்ரெய்லரை வெளியிட்ட செல்வராகவன்

ABOUT THE AUTHOR

...view details