வதோதாரா:குஜராத் மாநிலம், வதோதரா பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அப்பெண் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தன்னை ஆண் எனக்கூறி ஒருவர் ஏமாற்றித்திருமணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அப்புகாரில் மேட்ரிமோனி இணையதளம் மூலம் டெல்லியைச்சேர்ந்த டாக்டரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பல ஆண்டுகளாக தனக்கு நோய் இருப்பதாகக் கூறி பல ஆண்டுகள் உறவு கொள்ளாமல் இருந்ததாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்பு பெண்ணாக இருந்த அந்நபர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாகவும்; அந்நபர் மற்றும் அவரின் தாயார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'கடந்த 2006ஆம் ஆண்டு ஜாம்நகரில் அவருக்கும், அவரின் முதல் கணவருக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது' எனக் கூறினார்.