மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த மே 3ஆம் தேதி முதல் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் மக்களிடத்தில் தவறான செய்திகள், பிரச்சாரம் ஆகியவற்றை பரப்புவதை நிறுத்த மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் நிலைமை சீரடைந்துள்ளதால் மொபைல், இணைய சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களின் வருகையை அரசாங்கம் தொடர்ந்து கையாளும். மேலும், இந்தியா-மியான்மர் எல்லையில் முழுமையான வேலி அமைக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. மணிப்பூரில் உள்ள சர்வதேச எல்லையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது” என கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சுதந்திர இயக்க ஆட்சியை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையை சரியாக பாதுகாப்பதில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். கடந்த 2 மாதங்களாக கலவரங்கள் குறைந்து சூழ்நிலைகள் மேம்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால் மாநில இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.