தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி கட்சி

டெல்லி: உத்தரகாண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

By

Published : Jul 12, 2021, 8:19 AM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படும் என அம்மாநில மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஆஃபர் கொடுத்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) டேராடூன் சென்றார். அங்கு அவர், “ உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்த பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் கொள்ளையடிக்கவே திட்டங்களை உருவாக்கினார்களே தவிர மக்களுக்குத் தேவையான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

300 யூனிட் மின்சாரம் இலவசம்:

பொதுமக்கள், விவசாயிகளின் நிலைமையை அறிந்த நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம். விவசாயிகள் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்கான நேரம் வரும்போது அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: தினந்தோறும் புதிய போராட்டம் - விவசாயிகளை சாடிய பாஜக அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details