லக்னோ : சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங்கிடம் அவரது இளைய மருமகளும், அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான அபர்ணா யாதவ் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், முலாயம் சிங் யாதவ் காலில் விழுந்து அபர்ணா யாதவ் ஆசிர்வாதம் வாங்குகிறார். தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில் அபர்ணா யாதவ், “பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் ஆன நிலையில் தந்தையும், தலைவருமான முலாயம் சிங்கிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அபர்ணா யாதவ் முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ்வின் மனைவி ஆவார். இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பெண்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.