ஆந்திரா: ஆந்திர மாநிலம், திருப்பதியின் வைகுண்டபுரத்தில் கழிவுநீர் குழியில் இறங்கிய தூய்மைப்பணியாளர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள பாதாள சாக்கடைக்குள் சுத்தம் செய்வதற்கு இரண்டு பணியாளர்கள் கயிறு கட்டி இறங்கினர். அதில் இருந்து திடீரென வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் ஆறுமுகம் என்னும் நபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.