தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - திருமாவளவன் சூசகம்! - India Bloc Meeting

VCK Party MP Thirumavalavan: இந்தியா கூட்டணியின் தலைமையை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் இருக்குமாறும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை வலியுறுத்திய போது அவர் அதை மறுத்துவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 8:40 PM IST

டெல்லி : இந்தியா கூட்டணியின் 4வது கட்ட ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை தேர்ந்தெடுக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இதை ஏற்க மறுத்த மல்லிகார்ஜூன கார்கே தேர்தலில் வெற்றி பெறுவது முதல் பணியாக இருக்க வேண்டும் என்றும் அதன்பின் தலைமை குறித்து அலோசிக்கலாம் என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே இருக்க வேண்டும் என்றும், அவரை வரும் தேர்தலில் பிரதமராக முன்னிறுத்துவோம் என்றும் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தனர்.

ஆனால் கார்கே இதை திட்டவட்டமாக நிராகரித்தார். இந்த ஆலோசனை தேவையில்லை, தேர்தலுக்குப் பிறகுதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய முடியும் என்றார். பிரதமர் தேர்வு குறித்த இந்த கருத்தை மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக நிராகரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க :எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் மல்லிஜார்ஜூன கார்கே? ஷாக் கொடுத்த மம்தா, கெஜ்ரிவால்! கார்கே ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details