மேற்கு வங்கம் மாநிலம் பிர்பூமின் சியூரி பகுதியில் பாஜக தலைவர் திலீப் கோஷின் தலைமையில் நேற்று (நவம்பர் 26) பேரணி நடைபெற்றது. 2021ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்து வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தெரிகிறது.
பாஜகவினர் சென்ற வழிகளை மாட்டு சாணத்தால் சுத்தம் செய்த திரிணாமுல் காங்கிரஸ்! - திரிணாமுல் காங்கிரஸ் மாட்டு சானம்
கொல்கத்தா: பிர்பூமின் சியூரி பகுதியில் பாஜகவினர் பேரணி சென்ற வழிகளை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு சாணத்தால் சுத்தம் செய்தனர்.
பாஜக
இந்நிலையில், பாஜகவினர் பேரணி சென்ற வழிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு சானத்தால் இன்று (நவம்பர் 27) சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இனவாத நல்லிணக்கத்தை அழிக்க துடிக்கும் பாஜக என்ற வைரஸை நிலத்திலிருந்த விரட்ட மாட்டு சானத்தை பயன்படுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் உருவப்படத்தை மாட்டு சாணத்தால் சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.