சண்டிகர்: பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதில் கோல்டி ப்ரார், லாரன்ஸ் பிஷ்ணோய் உள்ளிட்ட உள்ளூர் கேங்க்ஸ்டர் கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த கேங்க்ஸ்டர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, டேவிந்தர் பாம்பிஹா என்ற கேங்ஸ்டர் கும்பல், "கேங்ஸ்டர்கள் தேவை" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்பு எண்களை கொடுத்து, கேங்ஸ்டராக விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.