குஜராத்:கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் (IELTS)-ல் 6.5 முதல் 7 வரை மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்தது. ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள், ஆங்கிலப் புலமை தேர்வில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று எப்படி கனடா வந்தார்கள்? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.