திருவனந்தபுரம்:கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பண்ணைகளிலிருந்த 500-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்றனர்.
அதோடு மானந்தவாடியில் உள்ள மற்ற பன்றிப்பண்ணைகளிலும் ஆய்வு நடத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். இந்த நிலையில், கண்ணூர் மாவட்டத்தின் நென்மேனி கிராமத்தில் உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது.