திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியது. இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் தரப்பில், "மானந்தவாடியில் உள்ள பண்ணையின் அனைத்து பன்றிகளும் ஜூலை 21ஆம் தேதி திடீரென உயிரிழந்தன.
இதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து, பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பினோம். இதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அதோ பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையிலும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதியானது.